யாழில் குண்டு தாக்குதல்; சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வல்லிபுரப் பகுதியில் காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மற்றொருவரைத் தேடிச் சென்ற நிலையில் அவருடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்

மேலதிக விசாரணைகளின் பின்னரே இவரின் கைது தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post