முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிரான மனு மீது நாளை தீர்ப்பு!!

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிரான மனு மீது நாளை தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

வெள்ளைவேன் சாரதிகள் என இருவரை ஊடகங்களுக்கு முன்பாக நிறுத்தி போலித்தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதன்படி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் கிடைக்குமா இல்லையா என்பதை நாளை நீதிமன்றம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post