மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் மரணம்; கொரோனா என சந்தேகம்!!

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துய்யார்.

மாத்தறை நூபே பிரதேசத்தை சேர்ந்த நாலக்க தரங்க சமரவீர என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

தனது மனைவி அவருக்கு எதிராக வெலிசர நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கிற்கு உரிய முறையில் ஆஜராகாமல், பணம் செலுத்தாமல் இருந்தமையினால் இந்த சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மாத்தறை பொலிஸ் தலைமையகத்தினால் கடந்த 15ஆம் திகதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.இதன் போது அவர் விளக்கமறியல்படுத்தப்பட்டார். வெலிசர நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்படவிருந்த சந்தர்ப்பத்தில் திடீர் சுகயீனமடைந்துள்ளார்.

வயிறு வலிப்பதாக கூறிய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு PRC பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் 500இற்கும் மேற்பட்ட கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post