"கொரோனாவை தோற்கடிப்போம் உணவுப்பற்றாக்குறையை வெற்றிகொள்வோம்" விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுப்பு!!

செ.துஜியந்தன்
கொரோனாவை தோற்கடிப்போம் உணவுப்பற்றாக்குறையை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தினால் விவசாயிகளையும் மக்களையும் அறிவுறுத்தும் விழிப்புணர்வுப்பிரச்சாரம் நேற்று அம்பாறை சவளக்கடை, அன்னமலை, நாவிதன்வெளி விவசாயபோதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

தேசிய உணவுத்தேவையை பூர்த்தி செய்யக்கூடியவகையில் 2020 இல் மேற்கொள்ளப்படும் சிறு போகத்தில் அனைத்து நிலங்களிலும் வீட்டுத்தோட்டச் செய்கை, பழமரச்செய்கை, மரக்கறிப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதற்கமைய சிறுபோகத்தில் மிளகாய், பாசிப்பயறு, குரக்கன் நிலக்கடலை, கௌப்பி, சோளம், உழுந்து, சோயா, பெரியவெங்காயம், சின்னவெங்காயம், எள், உருளைக்கிழங்கு, மஞ்சள், இஞ்சி ஆகிய பயிர்களை நடுவதற்கு விவசாயிகள் பங்களிப்பு செய்யலாம் இதற்காக உங்கள் பிரதேசத்திலுள்ள கமநல சேவை நிலையத்தினூடாக தேவையான பசளை மற்றும் தொடர்புகளுக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரின் உதவியை நாடலாம். 

அத்துடன் விதைகள், தொழில் நுட்ப ஆலோசனைகளுக்கும் பிரதேச விவசாயபோதனாசிரியர், தொழில் நுட்ப உதவியாளர்களின் உதவியைப்பெற்றுக்கொள்ள முடியும். என பிரதேச விவசாயிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.

இவ் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையில் சவளக்கடை விவசாயபோதனாசிரியர் கீர்த்திகா, அன்னமலை விவசாயபோதனாசிரியர் ஜெகதீஸ்வரன், விவசாய பாட விதான உத்தியோகத்தர் குணனீதராசா, விவசாய தொழில் நுட்ப உதவியாளர்கள் கஜானந், ரஜீதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post