போதைக்கு அடிமை; தனிமைப்படுத்தலை தொடர்ந்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட நபர்கள்!!

வெலிகந்த - கல்கந்த தனிமைப்படுத்தல் முகாமில் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 25 பேர் எட்டு மாத காலத்திற்கு கந்தகாடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

போதை பழக்கத்திற்கு அடிமையான 25 பேர் இவ்வாறு கந்தகாடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

25 முதல் 50 வயதுக்குட்பட்ட நபர்கள் இன்று பொலநறுவை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த அனைவரும் கந்தகாடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கொழும்பு, மோதரை மற்றும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் கடந்த மாதம் 16ம் திகதி வெலிகந்த தனிமைப்படுத்த முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனிடையே, குறித்த அனைவருக்கும் தொழில்பயிற்சி வழங்கப்படும் என வெலிகந்த பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post