இரட்டைச்சகோதரிகள் க.பொ.த(சாதாரண) பரீட்சையில் சிறப்புபெறுபேறு பெற்றுள்ளனர்!!

செ.துஜியந்தன்
இம்முறை நடைபெற்ற கல்விப்பொதுத்தரசாதாரணப் பரீட்சையில் மட்ட்களப்பு கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த இரட்டைச்சகோதரிகள் இருவர் எட்டுப்பாடங்களில் ஏ சித்தியையும் ஒரு பாடத்தில் பி சித்தியையும் பெற்றுள்ளனர். (8ஏ,1பி)

பட்டிருப்புக்கல்வி வலயத்திற்குட்பட்ட Nhட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஜெயராசா சுதாஜினி தம்பதிகளின் இரட்டையர்களான கிஷானி, கிருத்திஷா ஆகிய மாணவிகளே சம அளவிலான பெறுபேறுகளைப்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இம் மாணவிகளின் தந்தை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் சாரதியாக பணிபுரிந்து வருகின்றார்.

இம்முறை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் க.பொ.த.சாதாரண பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாக வித்தியாலய அதிபர் ச.கணேஸ்வரன் தெரிவித்தார். பரீட்சையில் சம அளவிலான பெறுபேற்றினைப் பெற்றக்ககொண்ட இரட்டைச்சகோதரிகள் இருவரும் எதிர்காலத்தில் வைத்தியராக வந்து சமூகத்திற்கு சேவை செய்வதே தமது நோக்கம் என தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post