கிளிநொச்சி - பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் பலி!!

கிளிநொச்சி - பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

பளை நகர் பகுதியில் வைத்து யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கில் திடீரென எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த விமான படைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியுடன் மோதியுள்ளது.

இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நாவற்குளியை சேர்ந்த அந்தோனி அஞ்சலஸ் வயது 51 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post