பரபரப்புடன் அறிமுகமாகிய Messenger Room வசதி!!

பேஸ்புக் நிறுவனம் நேற்றைய தினம் புதிய வீடியோ அழைப்பு வசதியான Messenger Room இனை அறிமுகம் செய்திருந்தது.

இது வழமையான வீடியோ அழைப்புக்களை போன்று அல்லாது குழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இதில் ஒரே நேரத்தில் 50 நபர்கள் சேர்ந்து குழுவாக இணைந்துகொள்ள முடியும்.

அதுமாத்திரமன்றி குழு அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு காலவரையறை இல்லை.

அதாவது எவ்வளவு மணி நேரமும் தொடர்ச்சியாக வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் இதில் வாட்ஸ் ஆப் மற்றும் Facetime போன்று End-to-End என்கிரிப்ட் வசதி தரப்படவில்லை.

குழு வீடியோ சட் வசதியை ஏற்படுத்துவதற்கு பேஸ்புக் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும்.

எனினும் இவ் வீடியோ சட்டில் இணைந்துகொள்வதற்கு பேஸ்புக் கணக்கு அவசியம் இல்லை.

பேஸ்புக் அப்பிளிக்கேஷனிலிருந்தோ அல்லது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனிலிருந்தே ஒருவரை வீடியோ சட்டில் இணைப்பதற்கான இணைப்பினை அனுப்ப முடியும்.

விரைவில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் என்பவற்றிலும் Messenger Room வசதி தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post