இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர்; கமெராவில் சிக்கிய துயர காட்சி!! VIDEO

இந்தியாவில் நபர் ஒருவர் பசிக் கொடுமை தாங்க முடியாமல், சாலையில் அடிபட்டு கிடந்த நாயின் சடலத்தை சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில் உள்ளது. 

சில தளர்வுகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டாலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு காரணமாக கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நாய் ஒன்று விபத்தின் காரணமாக அடிபட்டு சாலையில் இறந்து கிடக்கிறது.

அதை நபர் ஒருவர் பசி தாங்க முடியாமல் அந்த நாயின் சடலத்தை சாப்பிடுகிறார்.

அப்போது அந்த வழியே சென்ற நபர் ஒருவர் குறித்த நபரை அதை சாப்பிடாதே என்று கூறியும், அவர் தொடர்ந்து சாப்பிட முயற்சி செய்ய, உடனே சாப்பாடு மற்றும் தண்ணீரை அவருக்கு கொடுக்கிறார். 

இதையடுத்து அந்த நபர் அந்த சாப்பாடு மற்றும் தண்ணீரை குடிக்கிறார். 

இந்த ஊரடங்கு காரணமாக பல லட்சம் குடும்பங்கள் ஏழ்மையில் சிக்கி தவிக்கும், ஏராளமானோர் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இறப்பார் என்று புள்ளி விவரங்கள் கூறி வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் அதற்கு உதாரணமகா நடந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post