உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1 கோடியை கடந்தது!

உலகளவில் கொரோனா உயிரிழப்புக்கள் 5 இலட்சத்தை கடந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.

அத்துடன், சீனாவில் கொரோனா மீண்டும் தீவிரம் பெற தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா தொற்றினால் இதுவரை 10,080,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 501,262 பேர் உயிரிழந்தனர். 5,457,945 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று உலகளவில் 4547 பேர் உயிரிழந்தனர். புதிதாக 176,568 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

நேற்று பிரேஸிலில் 994 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 57,103. புதிதாக 35,887 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதுவரை 1,315,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று 512 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 128,152 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 43,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,596,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிக்கோவில் 719 பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 25,779 ஆகஉயர்ந்துள்ளது. புதிதாக 5,441 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 208,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று 414 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 16,103 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 20,131 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 529,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீனா மற்றும் தென்கொரியாவில் அதிக கொரொனா தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. தென்கொரியாவில் 51, சீனாவில் 21 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகியுள்ளனர். சீனாவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 17 பேர் தலைநகர் பெய்ஜிங் உணவுச்சந்தையில் கொரோனா பரவியதால் பாதிக்கப்பட்டவர்கள். உணவுச்சந்தையின் மூலம் கொரோனா பரவிய சங்கிலியை அறுத்து விட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் பதிவான புதிய தொற்றுக்களில் 35 பேர் தலைநகர் சியோலில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியை சேர்ந்தவர்கள்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தவும், மருத்துவ பணியாளர்களை கௌரவிக்கவும் வித்தியாசமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 40 சிறிய ஆளில்லாத விமானங்கள் மூலம் வானத்தில் ஒளி வடிவங்கள் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இந்த உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன

0/Post a Comment/Comments

Previous Post Next Post