முகக்கவசம் அணியாதவர்கள் 14 நாள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப் படுவார்கள்.

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாத பொதுமக்கள் நாளை முதல் 14 நாள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று போலீசார் இன்று அறிவித்தனர்.

COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த 3 மாதங்களில் காணப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் தொடரப்பட வேண்டும் என்று அஜித் ரோஹானா பேசினார்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post