இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான 16922 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான 16922 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 473,105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 14,894 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 13,012 பேர் குணமடைந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை 2,71,696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும் இந்தியாவில் குணமடைவோர் சதவிகிதம் 57.43%-ஆக உள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 73, 792 பேர் குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 70,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,365 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 41,437 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. 

தமிழகத்தில் 67,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 866 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,763 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post