கொழும்பில் நடு வீதியில் சரமாரியாக வெட்டப்பட்ட நபர்! 19 வயதாக இளைஞர் ஒருவரும் கைது!!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானி இம்ரானின் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று மாலையும் 19 வயதான சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சத்ஹிரு செவன தொடர்மாடி குடியிருப்பிற்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சிப்பானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேரில் முதலாவது சந்தேகநபரான அனேஸ் ராஜா என்பவர் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூன்று சந்தேகநபர்களும் 24 மணித்தியால தடுப்புக்காவலில் விசாரணை செய்ய நீதிமன்றத்திடம் பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

இதேவேளை, கஞ்சிபானி இம்ரானின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஜித் நேற்று முன்தினம் மாலை 6.39 மணி அளவில் மாளிகாவத்தை சத்தர்ம விஹாரைக்கு முன்னாள் தாக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலை இந்தியாவில் மறைந்து வாழும் போதை பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றசெயல்களை புரிபவருமான புகுடு கண்ணா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post