வெளிநாடுகளில் பணியாற்றும் 20 ஆயிரம் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

வெளிநாடுகளில் பணியாற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்களின் தொழிலை பாதுகாப்பதற்காக தூதரக மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கை பணியாளர்களை சில நாடுகளுக்கு வேலைக்காக மீண்டும் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post