கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும்-இரா.சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ் பேசும் மக்கள் வாக்குகளை பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் எனவும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டிய சந்தர்ப்பத்தில் நாங்கள் இருக்கின்றோம். இதை எல்லாத் தலைவர்களும் அதாவது மகிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறிசேன ஆகிய தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post