மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் 23 இலங்கையர்கள் பலி; இறுதிச்சடங்கு அங்கையே நடத்தபட்டதாக தகவல்!!

மத்திய கிழக்கில் கொரோனா வைரஸ் காரணமாக 23 இலங்கையர்கள் பலியாகியிருப்பதாக, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இலங்கையை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளனர்.

அங்கே தங்கி பணி புரிந்து வரும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையர்கள் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் அவர்கள் எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது மத்திய கிழக்கில், 23 இலங்கையர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 8 பேரும், குவைத்தில் இருந்து 7 பேரும், துபாயில் 6 பேரும், ஓமானில் இருந்து 2 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களின் இறுதிச்சடங்குகள் அந்தந்த நாடுகளிலே சுகாதார வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post