கப்பல் மூலமாக வரும்போது முகவரிகள் அழிந்த 26,000 பொதிகளின் உரிமையாளர்கள் விபரம் கண்டறியப் பட்டது.

வௌிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் நாட்டிற்கு அனுப்பப்பட்ட முகவரிகள் அழிந்த பொதிகளில்
சுமார் 26,000 பொதிகளின் முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட 45,000 பொதிகளில் 37,000 இற்கும் அதிகமான பொதிகளின் முகவரிகள் அழிந்திருந்தன.

முகவரிகளை கண்டறிய முடியாமல் இருந்த சுமார் 19,000 பொதிகள் மலேஷியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய தபால் பரிமாற்றகம் குறிப்பிட்டுள்ளது.

மலேஷியாவின் உதவியுடன் அடுத்த வாரத்திற்குள் முகவரிகளை கண்டறிய முடியும் என பரிமாற்றகத்தின் அதிகாரி அஸ்லாம் ஹசன் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்ட பொதிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தபால் பரிமாற்றகம் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post