விவேகானந்த சமுதாய நிறுவகத்தின் ஏற்பாட்டில் வீட்டுத்தோட்டத்தில் ஆர்வமுடைய 30 மாணவர்களிற்கு பயிர் செய்கைக்கான விதைகள் வழங்கி வைப்பு!!

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சமூகநல சேவைப் பிரிவாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் விவேகானந்த சமுதாய நிறுவகத்தின் ஏற்பாட்டின் கீழ் தொழில்நுட்ப பயிற்சிகள் பெறும் மாணவர்களில் வீட்டுத்தோட்டத்தில் ஆர்வமுடைய 30 மாணவர்களிற்கு வீட்டுத்தோட்ட செய்கைக்கான விதைகள், பயிரிடும் பைகள், மற்றும் அதற்கான உபகரணங்கள் என்பன அவுஸ்திரேலிய மருத்துவ உதவிக்கான அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தலைமையில், விவசாய மற்றும் கால்நடைகள் விரிவுரையாளர் செல்வி.எஸ்.டசினா மற்றும் கல்லூரியின் அதிபர், போதனாசிரியர்கள் ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைவாக கல்லூரியில் பயிலும் மாணவர்களில் வீட்டுத்தேட்டத்தில் ஆர்வமுடையவர்களை தெரிவு செய்து அவர்களிற்கு ஒரு வருடத்திற்கு சுழற்சி முறையில் பயிரிடக்கூடிய வகையிலான பெறுமதியான விவசாய செய்கைக்கான பொதிகள் வழங்கப்பட்டது. 

இளைய தலைமுறையினரிடையே தன்னிறைவு பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணரச்செய்யவும், ஒரு பொழுதுபோக்கூடாக எமது தேவைகளை நாம் உற்பத்தி செய்து குடும்பத்தின் பொருளாதாரத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் செயற்பாடாகவே இச் செயற்பாடு காணப்படுகின்றது. 

விவேகானந்த சமுதாய நிறுவகமானது கடந்த 3 மாதங்களாக எமது மாவட்டத்தில் கொரோனா தொற்று மூலமாக பாதிக்கப்பட்ட மக்களை கருத்தில் கொண்டு அவர்களிற்கான உலர் உணவுகளை வழங்கும் செயற்பாட்டின் மூலமாக கிட்டத்தட்ட 1850 குடும்பங்களிற்கு மேலாக உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையிலே சுய செயற்பாட்டின் மூலமாக தன்னிறைவு என்ற கருத்திற்கமைவாக இந்த உதவி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும். மாவட்டத்தின் வளங்களைப் பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாய செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடனே இந்த மாணவர்களிற்கான உதவிகள் வழங்கப்படுவதாகவும். தொடர்ச்சியான உதவிகள் மூலம் இவ்வாறா செயற்பாடுகளை முன்னெடுக்க இருப்பதாக கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post