97 பேர் உயிரிழந்த பாகிஸ்தான் விமான விபத்துக்கு காரணம் வெளியானது.

பாகிஸ்தானில் கடந்த மாதம் இடம்பெற்ற 97 பேர் கொல்லப் பட்ட விமான விபத்துக்கு விமானி மற்றும்
விமானக் கட்டுப்பாட்டகத்தில் நிகழ்ந்த மனிதத் தவற காரணம் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

 ஆரம்பக் கட்ட விசாரணை அறிக் கையை பாராளுமன்றத்தில் சமர்பபித்து உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் கூறும்போது, 

“விமானம் 100 வீதம் தகுதியுடையதாக இருந்தபோதும் கொரோனா வைரஸ் காரணமாக விமானி கவனயீனமாக இருந்துள்ளார்” என்று தெரிவித்தார்.

“விமானி,அதேபோன்றுகட்டுப்பாட்டாளர்நிலையான விதிகளை  பின்பற்றவில்லை” என்று அவர்  குறிப்பிட்டுள்ளார். 

ஏர்பஸ் ஏ320ஐ தரையிறக்க முயன்ற நேரத்தில் கொரோனா வைரஸ் பற்றி விமானி உரையாடிக் கொண்டிருந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். 

விமானி மற்றும் இணை விமானி கவனயீனமாக இருந்துள்ளனர். அவர்களின் உரையாடல்கள் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றியே இருந்தது” என்று கான் குறிப்பிட்டுள்ளார். 

கராச்சியின் தெற்கு துறைமுக நகரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து விபத்துக்கு உள்ளான இந்த விமானத்தில் இருந்த 99 பேரில் இருவர் தவிர்த்து ஏனைய அனைவரும் உயிரிழந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post