இலங்கை இராணுவம் தயாரித்த 9 கவச வாகனங்கள் மாலிக்கு கையளிக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட 9 கவச வாகனங்களை இராணுவத்
தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (26) வெள்ளிக்கிழமை காலை பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பார்வையிட்டார்.

ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையில் பணியாற்றும் இலங்கை படையினரின் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட இவை மாலிக்கு இலங்கை இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டன.


இந்த 9 வாகனங்களும் பென்லையின் ஏயன்சியின் முகாமையாளர் ரஹிலீன் போரத்திடம் இராணுவத் தளபதியால் ஒப்படைக்கப்பட்டன.


0/Post a Comment/Comments

Previous Post Next Post