கபில நிற தத்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கையும் வரம்பு பயிர் செய்கை அறுவடையும் ஆரம்பிப்பு!!

அம்பாறை மாவட்டத்தில் விவசாய நெற் நிலப்பரப்புகளில் பெருக்கமடைந்து வரும் கபில நிற தத்திகளின்(அறக்கொட்டியான்) தாக்கம் பரவலடைந்து வருகின்றது.

இதற்கமைய கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நெற் நிலப்பரப்புகளில் இதனை கட்டுப்படுத்தும் முகமாக விவசாயிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றது.

கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகாவினால் விரிவாக்கல் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள நெல் விவசாய நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை (19) நேரடியாக சென்று அவதானித்ததுடன் அங்கு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் மேற்கொண்டார் .

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் 

நெல் அறுவடை இறுதி கட்டத்தில் உள்ள போது இத் தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது இதனால் விவசாயிகளின் நெல் விளைச்சளுக்கு பெரிதும் பாதிப்பை உண்டு பண்ணுகிறது.

இது பற்றி உரிய அறிவுரைகளை நாங்கள் வழங்க தயாராக உள்ளோம் நீங்கள் இரசாயன பாதார்தங்களை உபயோகிக்கும் போது எங்களிடம் ஆலோசனைகளை பெற்று கொள்ள வேண்டும் .மேலும் இது தொடர்பாக நீங்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

மேலும் விவசாய ஆலோசனைகளை பெற்றுக்கொள் ளும் முகமாக விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதுன்

இதன் போது நாடுபூராகவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ' வேலைத்திட்டம் -2020 கீழ் நெல் வயல் நிலங்களில் உள்ள வரம்புகளில் பயிர் செய்கைக்காக விதைகள் விவசாயிகளுக்கு அண்மையில் வழங்கப்பபட்டது. 

இதன் மூலம் செய்கை பண்ணப்பட்ட வெண்டி,பயற்றை ,போன்ற மேட்டு நில பயிர்கள் இதன் போது இங்கு அறுவடை செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது

இதன் போது கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் தொழில்நுட்ப உதவியலாளார் குகழேந்தினி மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post