ஊடகவியலாளர் தரிஷாவின் கணினியைத் திருப்பி கொடுக்குமாறு சிபிஜே அறிவுறுத்தல்!!

இலங்கை அதிகாரிகள் உடனடியாக ஊடகவியலாளர் சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பெஸ்டியனின் கணினியைத் திருப்பி கொடுக்கவேண்டும். அத்துடன் துன்புறுத்தலுக்கு அஞ்சாமல் முறைப்பாடுகளை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 9 ம் திகதி, குற்றவியல் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் கொழும்பில் உள்ள பெஸ்டியன்ஸ் வீட்டில் சோதனை நடத்தி, 2019 நவம்பர் மாதம் நகரில் சுவிஸ் தூதரக பணியாளரைக் கடத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக அவரது மடிக்கணினியைக் கைப்பற்றியுள்ளனர்

இந்தநிலையில் தரிஷா பெஸ்டியன்ஸின் மடிக்கணினியைக் கைப்பற்றியதை சிபிஜே கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பின் ஆசியநிலை ஆய்வாளர் அலியா இப்திகார்,

ஊடகவியலாளர் பெஸ்டியனுக்கு எதிரான அச்சுறுத்தல் நடவடிக்கையை இலங்கை அதிகாரிகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இந்தநிலையில் சிபிஜேயின் மின்னஞ்சல் கோரிக்கைக்கு இலங்கையின் குற்றவியல் புலனாய்வுத் துறை பதிலளிக்கவில்லை. அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவின் செய்தித் தொடர்பாளர் மொஹான் சமரநாயக்கவும் பதிலளிக்கவில்லை என்று சிபிஜே குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post