தமிழ் மக்களின் பூர்வீகம் தெரியாமல் இருப்பது வேதனைதான் - ஞானசார தேரருக்கு பதிலடி!!

காவி உடையை போர்த்தி வாயால் பொய் உரைக்கும் இனவாத புத்தபிக்குகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகம் தெரியாமல் இருப்பது வேதனைதான்.

அல்லது தெரிந்தும் அதை மறைப்பது இனவாதம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் சொந்தப்பூமி இல்லை, அவர்களுக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என கூறிய கருத்துக்கு பதில் கூறுகையில்,

இலங்கை என்பது ஈழம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது, ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்து சிலோன் என அழைக்கப்பட்டது.

பின்பும் இலங்கை சிலோன்(Ceylon) என்ற பெயரிலே அழைக்கப்பட்டது. 1948,ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னும் இவ்வாறுதான் கூறப்பட்டது.

1972ம் ஆண்டுதான் சிலோன் என்ற பெயர் ஶ்ரீலங்கா என கூறப்பட்டுவருகிறது அதைநான் கூறவில்லை.

வடக்கு கிழக்குதாயகம் என்பது பல் நெடுங்காலமாக மன்னர் காலம் முதல் பூர்வீக வரலாற்று தமிழ் மக்களுடைய தாயகம் என்பது பல சரித்திர ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 1960ம் ஆண்டுவரை வடக்கு கிழக்கில் இருந்து எந்த ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் மருந்துக்கு கூட தெரிவாகவில்லை. இது ஞானசார பிக்குவிக்கு தெரியாமல் இருப்பது வேதனைதான்.

1827ம் ஆண்டு இலங்கையில் எடுக்கப்பட்ட முதலாவது சனத்தொகை கணிப்பீட்டில் சிங்களவர்கள் வடக்கு கிழக்கில் வாழவில்லை. ஒருசிலரே வாழ்ந்தனர். 

அந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 99.62 வீதமானவர்கள் தமிழ்பேசும் மக்களே வாழ்ந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் 98.44வீதமான தமிழ்பேசும் மக்களே வாழ்ந்தனர்.

அப்போது அம்பாறை மாவட்டமும், மட்டக்களப்பு மாவட்டத்துடனேயே இணைந்திருந்தது. 1961ம் ஆண்டுதான் அம்பாறை மட்டக்களப்பு, மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

1963,புள்ளிவிபரப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 96,வீதம் தமிழ்பேசும் மக்களும், அம்பாறையில் 80, வீதமான தமிழ்பேசும் மக்களும், திருகோணமலையில் 79, வீதமான தமிழ்பேசும் மக்களும் வாழ்ந்தனர்.

நாடாளுமன்ற ஜனநாயக தேர்தலில் கூட வடக்கு கிழக்கில் இருந்து எந்த ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவான சரித்திரம் இல்லை.

1960ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இலங்கையின் நான்காவது நாடாளுமன்ற தேர்தலின்போதுதான் முதன் முதலாக அம்பாறை தேர்தல் தொகுதியில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைசேர்ந்த விஜயசிங்க விஜயபாகு என்ற சிங்களவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகினார்.

1977ம் ஆண்டுதான் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில என்ற தொகுதி உருவாக்கப்பட்டு எச்.டீ லீலாரெட்ண என்ற சிங்களவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

1994ம் ஆண்டுதான் விகிதாசார் தேர்தல் முறையால் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக ஆறு ஆசனங்களில் 2, முஷ்லிம்களும் 4, சிங்களவர்களும் தெரிவானார்கள். ஆனால் 1980இல் அம்பாறையில் மீண்டும் தமிழர் பிரதிநித்துவம் உறுதி செய்யப்பட்டது.

இதுதான் வரலாறு. வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டார்கள். அதனால்தான் சிங்கள பிரதிநிதித்துவம் வடக்கு கிழக்கில் தற்போது உள்ளது. வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அடிநிலம் இல்லை பல கோடி அடிநிலம் இருந்தது இருக்கிறது.

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த இனவாத ஆட்சியாளர்களின் சூழ்சியால்தான் திட்டமிட்ட நில அபகரிப்பும் குடியேற்றங்களும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றன. இதை ஞானதாரதேரர் புரியாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

வடக்கு கிழக்கு தாயகம் தமிழ்பேசும் தாயகம் என்ற கொள்கையில் தான் தந்தை செல்வா 1949ம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்து ஒருசமஷ்டி அடிப்படையிலான் அரசியல் தீர்வுக்காக போராடினார் என்பதை ஞானதார்தேரர் புரிந்து கொள்ளவேண்டும்.

வடக்கு கிழக்கில் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அடி நிலமில்லை பல கெக்டர் கோடி நிலம், கடல்வளம் எல்லாம் உள்ளது சரித்திரம் தெரியாமல் புலம்பவேண்டாம். புத்தரின் பெயரால் பொய் உரைக்க வேண்டாம் எனவும் மேலும் கூறினார்.

வடக்கு, கிழக்கில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்குச் சொந்தம் இல்லை; சம்பந்தனுக்கு ஞானசாரர் பதிலடி!!

0/Post a Comment/Comments

Previous Post Next Post