கல்முனை சேர்ந்த நபர் கொரோனா தொற்றினால் சவூதி அரேபியாவில் உயிரிழப்பு…!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையரொருவர் சவூதி அரேபியாவில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலட் ஜெனரல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதான மீராசாஹிப் அப்துல் ரசீத் என்பவரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமாகியுள்ளதாக கொன்சியூலட் ஜெனரல் அலுவலக பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றும் இவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 21 நாட்களாக ஜித்தாவிலுள்ள சுலைமான் பகி எனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் இவரின் ஜனாஸாவினை அவசரமாக ஜித்தா நகரில் நல்லடக்கம் செய்தவற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலட் ஜெனரல் அலுவலகம் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post