சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் கருணா வெளியிட்ட கருத்து. வீடியோ இணைப்பு.

2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாகவும் மட்டக்களப்பு அம்பாறை எல்லைக்கல்லை கல்முனை ஹரீசை அடக்குவதற்காக புல்ட்டோசர் போட்டு அகற்றியதாகவும் கருணா கூறியுள்ளார்.

தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும் அந்த நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை புரியும் என்றும் அரசியல் விதண்டாவாதிகளுக்கு இது புரியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.,
மேலும் நான் என்ன கூறினேன் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன் என தெரிவித்துள்ள கருணா அம்மான் இதற்காக என்னை கைது செய்ய முடியாது என்றும் கருணா தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என தென்பகுதியில் அழுத்தங்கள் அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் இது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் கருணா அம்மான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post