நாவிதன்வெளி பிரதேச பாடசாலை சுகாதார கழகங்களை புனரமைக்க தளபாடங்கள் வழங்கி வைப்பு!!

பாடசாலைகளிலுள்ள சுகாதார கழகங்களை புனரமைக்கும் நோக்கோடு வேர்ல்ட் விஷன்( உலக தரிசனம் ) அமைப்பு சுகாதார வைத்திய முறைக்கான ஆரம்பகட்ட தளபாடங்களை வழங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை(19) பாடசாலை அதிபர்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகளில் சுகாதார கழகங்கள் இன்றியமையாதது இதனை முன்னிட்டு முதல் கட்டமாக நாவிதன்வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள 6 பாடசாலைகளுக்கு கட்டில்கள் , திரை , காட்சிப்படுத்தல் பலகை, கதிரை, மேசை உட்பட 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் பிராந்திய முகாமையாளர் எஸ்.செல்வபதி ஊடாக அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post