குன்றும் குழியுமாக காணப்படும் வீதியை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை.


கல்முனை உப பிரதேச செயலகத்திற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி பிரதான வீதியில் இணையும் பொது விளையாட்டு மைதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிகுந்த பகுதியில் உள்ள குறித்த வீதி பல மாத காலமாகியும் உடைந்து பள்ளமாகவும் வெள்ள நீர் தேங்கியும் காணப்படுகின்றது.

அதனைத் திருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது குறித்து பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ் வீதி திருத்தப்படாவிடில் வாகனங்கள் விபத்துக்குள்ளாக நேரிடுமென மக்கள் சுட்டிக் காட்டியுள்ள மக்கள் இதனைத் திருத்துவதற்கு குறைந்த செலவே ஏற்படுமென மக்கள் கூறுகின்றனர்.
அண்மைக்காலமாக கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற கம்பெரலிய போன்ற அபிவிருத்தி திட்டங்களில் இவ்வீதி உள்வாங்க படாத போதிலும் கல்முனை செல்வதற்கு செல்லும் வீதிகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால் அதனைத் திருத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post