கெமரா வர்த்தகத்தை கைவிட்டது ஒலிம்பஸ்

Olympus Quits Cameras (Is there hope?) - YouTubeஉலகின் மிகப் பெரிய கெமரா உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஒலிம்பஸ் கடந்த 84 வருடங்களின் பின் கெமரா வர்த்தகத்தை கைவிட தீர்மானித்துள்ளது.

கடும் முயற்சி மேற்கொண்டபோதும், டிஜிட்டல் கெமரா சந்தை தொடர்ந்து இலாபம் தரக்கூடியதாக இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் போர்ன்களின் வருகை யை அடுத்து தனித்த கெமராவுக்கு மாத்திரமான சந்தை சுருங்கிவிட்டது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஜப்பானிய நிறுவனமான ஒலிம்பஸ் நுண்யோக்கி உற்பத்திக்குப் பின் 1936 ஆம் ஆண்டு கெமரா உற்பத்தியை ஆரம்பித்தது. அடுத்த தசாப்தங்களில் தமது கெமரா வர்த்தகத்தை மேம்படுத்திய அந்த நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.

எனினும் ஒலிம்பஸ் நிறுவனம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் நுண்ணோக்கிகள், மருத்துவ மற்றும் விஞ்ஞான உபகரணங்களின் உற்பத்திகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post