சிறைச்சாலை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து, கஞ்சிபான இம்ரான், வெலே சுதா உள்ளிட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி 
இம்ரான், வெலே சுதா மற்றும் குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்று (26) இரவு கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி காலை முதல் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை இவர்கள் ஆரம்பித்திருந்தனர்.

தாம் சிறைக்கூடத்தில் இருக்கும் நேரம் அதிகம் என்பதால் தங்களை சிறைச்சாலை வளாகத்திற்குள் அதிக நேரம் வசிப்பதற்கு அனுமதிக்குமாறு கோரியே இவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் நேற்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனினும் தமது கோரிக்கைக்கு 3 நாட்களுக்குள் உரிய தீர்வினை பெற்றுத்தருமாறும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post