தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அதிபர்களுக்கு அழுத்தம்- இலங்கை ஆசிரியர் சங்கம்

தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு பாடசாலை அதிபர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்படுவதாகவும், அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளது.
பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள வளங்கள் கிடைப்பதற்கு பாடசாலை அதிபர்கள் தேர்தல் வேட்பாளர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்க வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ் எல்லா பிரதேசங்களிலுமே அதிபர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும், அதிபர்களை அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்வது சட்ட விரோத நடவடிக்கை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அழுத்தங்கள் அதிபர்களை கடுமையான உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
தேர்தல் சட்டங்களுக்கமைய அதிபர் சேவையில் உள்ளவர்களுக்கு அரசியல் வரப்பிரசாதங்கள் இல்லையென்றும் அதிபர்கள் தேர்தலில் சிரேஷ்ட தேர்தல் அதிகாரியாக கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றவர்கள் என்றும் ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணைக்குழுவில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post