வாகனங்களுக்கான அபராதம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிப்பு!!

வாகனங்களுக்காக அபராதம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொலிஸாரினால் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து அபராத பத்திரத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் திகதி வரை இதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்குக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த அபராத பணத்தை நாடு முழுவதும் உள்ள எந்தவொரு தபால் நிலையத்தில் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post