பொதுத்தேர்தல்; சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு இம்முறையும் சர்வதேச கணிப்பாளர்கள் வருகை தரவுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் இரண்டு வாரகால தனிமைப்படுத்தல் விதிமுறையை நிறைவு செய்து,கொரோனாத் தொற்று அற்றவர்கள் என்பதை உறுதி செய்த பின்னரே தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட முடியுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கும் தேர்தல் ஆணையாருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இம்முறையும் பொதுநலவாய அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம்,தென்கொரியாவின் அன்பிறில் அமைப்பு ஆகியவற்றின் சர்வதேசக் கண்காணிப்புப் பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post