அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது!

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(24) கூடவுள்ளது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 06 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இதன்போது இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையில் காணப்படும் உறுப்பினர்களுக்கான வெற்றிடத்திற்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post