களுத்துறை மாநகர சபையின் மேயர் அமீர் நசீர் கைது செய்யப்பட்டுள்ளார்.!


களுத்துறை மாநகர சபையின் மேயர் அமீர் நசீர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பகுதியில் மூடப்பட்டிருந்த மைதானம் ஒன்றின் பூட்டினை உடைத்து உள்நுழைந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்,

அத்துடன் களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ் ஏ டி நிலந்தவும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கடந்த 23 ஆம் திகதி குறித்த 2 பேர் உட்பட 12 பேர் மூடப்பட்டிருந்த மைதானத்திற்குள் பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post