கருணாவின் கருத்து குறித்து மனம் திறந்த சவேந்திர சில்வா!

இராணுவத் தளபதி சவேந்திர ...ஸ்ரீலங்கா இராணுவம் குறித்து சில தனிநபர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து கரிசனை கொள்ளவேண்டிய தேவையில்லையென இராணுவதளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனநாயக ரீதியான நாடு என்பதால் யாரும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

கருணாவின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெதரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா இராணுவத்தின் பெரும்பான்மையான நிலைப்பாடு குறித்து எந்தவித விசேட கருத்தினையும் வெளியிட வேண்டிய தேவை தனிநபர்களுக்கு இல்லை.

இரண்டு தனிநபர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தை பற்றி சில கருத்துக்களை வெளியிட்டாலும் கூட அது குறித்து அக்கறைகொள்ளவேண்டிய அவசியமில்லை.

ஆகையால் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறிய கருத்துக்கள் குறித்து எவரும் கரிசனை கொள்ள வேண்டிய தேவை.

இதேவேளை கொவிட் - 19 காரணமாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post