களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் கைது!

பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்களை அகற்றிய சம்பவம் தொடர்பாக களனி பல்கலைக்கழகத்தின் 9 மாணவர்கள் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 24ம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் சில உறுப்பினர்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்களை வலுக்கட்டாயமாக அகற்றியிருந்தனர்.

மாணவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியிருந்ததுடன், எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தது.

கெமராக்கள் அகற்றப்பட்ட பின்னர், மாணவர் சங்க உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர், மேலும் இது எதிர்ப்பின் அடையாளமாக செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெப்ரவரி 28ம் திகதி பௌத்த பிக்கு மாணவர் உள்ளிட்ட 04 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post