மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட தகவல் தொடர்பாக முறைப்பாடு!!

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப்போட்டி பணத்திற்காக அல்லது வேறு விடயத்திற்காக காட்டுக்கொடுக்கப்பட்டதாகவும் அது தொடர்பான தெளிவான சாட்சி தன்னிடம் இருப்பதாகவும் அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவான்சந்திர, விளையாட்டுப் போட்டிகளில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவில் எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இது குறித்து விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும முறைப்பாடு ஒன்றை செய்யுமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்ததாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடு சம்பந்தமான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தன்னிடம் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக சாட்சியங்கள் இருக்குமாயின் அதனை ஏன் 9 வருடங்களுக்கு முன் ஏன் அதனை வெளியிடவில்லை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post