சிறை பிடித்து வைத்திருந்த இந்திய படைவீரர்களை விடுவித்தது சீனா!

லடாக் பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து சீனா தாம் பிடித்து வைத்திருந்த 10 இந்திய படையினரை விடுவித்துள்ளது.

இதில் ஒரு லெப்டினன்ட் கேர்னலும், மூன்று மேஜர் தர அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாக இந்திய செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

எனினும் இதனை இந்திய அரசாங்கம் உறுதிசெய்யவில்லை. அத்துடன் சீனாவுடனான மோதலின்போது தமது படையினர் காணாமல் போனதாக இந்தியா அறிவிக்கவுமில்லை.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் கல்வான் பள்ளத்தாக்கில் இரண்டு தரப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 இந்திய படையினர் கொல்லப்பட்டனர். 76 இந்திய படையினர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் பிடிக்கப்பட்ட இந்திய படையினர் விடுக்கப்பட்டமையானது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான முக்கிய உந்துதலாக இருப்பதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post