சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இராணுவச் சிப்பாய்!!

மெதகம என்ற பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பீஸ்ஸ தியஹெல்ல என்ற பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இராணுவச் சிப்பாய் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தந்தையை இழந்த இந்த சிறுமி பாடசாலை மாணவி எனவும் அவர் சந்தேக நபரான இராணுவச் சிப்பாயை காதலித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், சிறுமியின் தாயாருக்கு தெரியாமல், சிறுமியை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெதகம பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post