லிப்கிஸ் கொடுத்து மோதிரம் மாற்றிய பீட்டர்பால்: வனிதா திருமணத்தின் சுவாரஸ்வமான தகவல்


நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் ஜூன் 27ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வனிதாவும் இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார் என்பதும் இந்த திருமணத்தில் தனது மகள்களுக்கு பூரண சம்மதம் என்று அவரே தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததேஇந்த நிலையில் இன்று வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் நடைபெற்றது. வெள்ளை உடையில் அழகிய தேவதை போல் வனிதாவும் கோட் சூட்டில் பீட்டர்பாலும் திருமண காஸ்ட்யூமில் கலக்கினர். திருமணத்தின் போது மோதிரம் மாற்றுவதற்கு முன்பு, பீட்டர் பால், வனிதாவுக்கு லிப் கிஸ் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார்இந்த திருமணத்தில் வனிதாவின் மகள்கள் உள்பட நெருங்கிய உறவினர்களும் பீட்டர் பால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.; வனிதா-பீட்டர்பால் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இன்று முதல் புதிய வாழ்க்கை தொடங்க இருக்கும் வனிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post