அவுஸ்திரேலியாவை மொத்தமாக முடக்கிய இணைய தாக்குதல்; பகீர் தகவலை வெளியிட்ட பிரதமர்!!

பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கத்தை குறிவைத்து வெளிநாட்டு சக்திகளால் அவுஸ்திரேலியா இணைய தாக்குதலுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஒரு 'அதிநவீன அரசு சார்ந்த நடிகர்' தொடர்ச்சியான இணைய தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறினார்,

இது பல மாதங்களாக நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஆனால் சமீபத்தில் அதிகரித்து வருகிறது என்றார்.

எந்த நாடு மீது தமக்கு சந்தேகம் என்பதை குறிப்பிட மறுத்த பிரதமர் மோரிசன், இதுபோன்ற அதி நவீன தாக்குதலை முன்னெடுக்க உலகில் விரல் எண்ணிக்கையிலான நாடுகளே உள்ளன என்றார்.

கடந்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் மற்றும் மூன்று பெரிய அரசியல் கட்சிகள் மீது சைபர் தாக்குதலை சீனா முன்னெடுத்தது கண்டறியப்பட்டது.
இருப்பினும் இதுவரையான விசாரணையில் எந்த தனிப்பட்ட தரவுகளும் களவு போகவில்லை என்றே தெரியவந்துள்ளது என்றார் பிரதமர் மோரிசன்.

அவுஸ்திரேலியாவின் முக்கிய அமைப்புகள் அனைத்தும் தற்போது ஒரு அதிநவீன இணைய தாக்குதலால் குறிவைக்கப்படுகின்றன.

அரசாங்க அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள், கல்வி, சுகாதாரம், அடிப்படை சேவைகள் வழங்குவோர் மற்றும் பிற உள்கட்டமைப்பை செயற்படுத்துவோர் என இந்த பட்டியல் நீள்வதாக பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post