ராஜபக்ச குடும்பத்தில் மோதலை ஏற்படுத்த முயற்சி!!

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாக திட்டியதை அடிப்படையாக கொண்டு ராஜபக்ச குடும்பத்தினர் இடையில் மோதலை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யசபால கோரளகே குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சியினரை பரம்பரையினர் முயற்சித்தாலும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அவர்களின் பரம்பரையினர் முயற்சித்தாலும் நாட்டில் ராஜபக்ச குடும்பத்தினர் இடையில் மோதலை ஏற்படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்வதற்கு எதுவுமில்லை என்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு தடையேற்படுத்த பல்வேறு வழிமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் யசபால கோரளகே குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post