பிரதமரின் விசேட அறிவுறுத்தல்

யானை- மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் விதத்தில் அபிவிருத்தி நிர்மாண பணிகளுக்கான திட்டங்களை வடிவமைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மகாவலி அபிவிருத்தி நிர்மாண அதிகார சபைக்கும், நீர் வழங்கல், வடிகாமைப்பு சபைக்கும் ஆலோசனை வழங்கினார்.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாண அபிவிருத்தி பணிகள் தொடர்பிலான சந்திப்பு இன்று பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம் பெற்றது.

முறையான திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி நிர்மாண பணிகள் முன்னெடுக்காததன் காரணமாக வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்க ஊடுறுவுகின்றன. இதில் யானை- மனித மோதலை பிரதமானமாக குறிப்பிட வேண்டும். யானை மனித மோதலின் காரணமாக பாரிய இழப்புக்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றன.

அதனடிப்படையில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வித்தில் அபிவிருத்தி நிர்மாண பணிகளுக்கான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். வன விலங்குகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கொள்கையாகவும் உள்ளது.

மகாவலி அபிவிருத்தி நிர்மாண பணிகள் அதிகார சபை, மற்றும் நீர்வழங்கல்,வடிகாலமைப்பு சபையின் கண்காணிப்பில் நாடு தழுவிய ரீதியில்முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் குறைந்த செலவின் மக்கள் பயன்பெறும் விதத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறும் பிரதமர் இதன் போது ஆலோசனை வழங்கினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post