திகாமடுல்ல தேர்தல் களத்தில் குதித்த குதிரை : நாவிதன்வெளி வயலோரம் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் அதா !!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டமைப்பின் பங்காளி கட்சியாக இருந்தாலும் அம்பாறை, பொலநறுவை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முதன்முறையாக தனது சொந்த சின்னமான குதிரை சின்னத்தில் களமிறங்கியுள்ள தேசிய காங்கிரசின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) மாலை நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் சார்பில் திகாமடுள்ள மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான தேசிய காங்கிரஸின் கொள்கை அமுலாக்கள் மற்றும் சட்டவிவகார செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ.எல்.எம்.சலீம், சட்டத்தரணி அல்ஹாபிழ் கே.எல்.சமீம், வர்த்தகர் ரீ.றஊப், வர்த்தகர் எம்.எஸ்.எம்.அன்ஸார், பிரபல உயர்தர உயிரியல் பாட ஆசிரியர் எம்.எஸ்.றிஷாத் ஷெரீப், தென்கிழக்கு பல்கலைகழக முன்னாள் உபவேந்தரும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் உருப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், எஸ்.எல்.எம்.பழீல் பீ.ஏ, அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மைய தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.என்.எஸ்.அஹமது மர்ஸூம் மௌலானா ஆகியோருடன் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், கல்முனை, அக்கரைப்பற்று மாநகர,பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் தேசிய காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து அந்நிராகரிப்பை மறுதளித்து தேசிய காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 30 ம் திகதி விசாரணைக்கு திகதியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post