வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தல் மே 2 ஆம் திகதி ...எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்த பின்னர், விரைவில் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடியே 77 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post