இலங்கையில் கொரோனா தொற்று- வைத்திய சங்கம் எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாவிட்டால், நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் ஏற்படக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது வைரஸ் தொற்று பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை பாதுகாக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர், வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

எனவே, வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் நாட்டில் பயணிக்கும் பகுதிகளில் ஏதாவது சந்தேகத்திற்கு இடமான நிலைமை தோன்றுமாயின், உடனடியாக அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இதனூடாக குறித்த பகுதிகளில் பரவலை தடுப்பதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post