கொரோனா தொற்றாளர்களை இனங்காண கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த செயலி!!

கொரோனா தொற்றாளர்களை இனங்காண, கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களினால் கைப்பேசி செயலி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால், இந்த புதிய சாதனம் கண்டுபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கைப்பேசி செயலி ஊடாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தொலைவில் வைத்தே இனங்காண முடியுமென அப்பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்களுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளர்களை இனங்காணுவதற்காக இந்த செயலி ஊடாக பல செயற்பாடுகளை முன்னெடுக்ககூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலியை வேறு நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பேராசிரியர் சந்தன குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post