ரிஷாட் பதியுதீனின் சகோதரன் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தமை உறுதி!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோததரான மொஹமட் ரியாஜ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஊடாக குறித்த விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் குண்டுதாரிகளுக்கு போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post