கருணாவை கட்சியிலிருந்து உடன் நீக்குங்கள்!

இராணுவ வீரர்களை கொன்றதாக கருணா தெரிவித்துள்ளமை பாரதூமான விடயமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கருணாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், 

“கருணா அம்மான் பாரதூரமான உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். மொட்டுக் கட்சியின் பிரதான பொறுப்பை வகிப்பவர் என்ற வகையில் இந்த உரை தொடர்பில், நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

இராணுவத்தை கொன்றவர் ​மொட்டுக் கட்சியில் அங்கம் வகிப்பதும் பாரதூரமானது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியை வெளியிடுகின்றது.

இந்நிலையில், அரசாங்கமும் இதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, கருணாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post