கவனம் தேவை, இல்லையேல் ஆபத்து - சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

Doctor Anil jasinghe @ Operation Centre for Prevention of COVID 19 ...சமூகத்தில் பலர் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தை முற்றிலும் கவனத்தில் கொள்ளாது நடந்துக்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முற்றாக நீங்கவில்லை என்பதால், சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை தொடர்ந்தும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இல்லாவிட்டால், மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆபத்தை குறைத்துக்கொள்ளும் மிகப் பெரிய பொறுப்பு சாதாரண மக்களுக்கே உள்ளது.

விமான நிலையம் திறக்கப்பட்டு நாடுகளுக்கு இடையிலான பயண வரையறை தளர்ப்பத்தப்பட உள்ளதால், சுகாதார ஆலோசனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை கடைப்பிடிப்பது கட்டாயம் எனவும் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.
அதேவேளை இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

இந்த எண்ணிக்கையுடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 383 பேர் நாட்டில் உள்ள சில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post